சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர்- நவம்பரில் வெளியாகிறது!!
ADDED : 367 days ago
விஜய்தேவர கொண்டாவுடன் இணைந்து 'குஷி' என்ற படத்தில் நடித்த சமந்தா அதன்பிறகு தற்போது 'சிட்டாடல்' என்ற ஹிந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா நடித்த 'சிட்டாடல்' என்ற தொடர் ஹிந்தியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராஜ்- டி.கே இயக்கும் இந்த தொடரில் வருண் தவான், சமந்தா ஆகிய இவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த தொடர் வருகிற நவம்பர் 7ம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.