வேட்டையன் படம் பார்க்கச் சென்ற வீடியோவை வெளியிட்ட துஷாரா விஜயன்!
ADDED : 368 days ago
ரஜினி நடிப்பில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் வேட்டையன். இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை அப்படத்தில் நடித்த பல நடிகர்களும் முக்கிய திரையரங்குகளில் பார்த்து ரசித்தார்கள். அவர்களில் துஷாரா விஜயனும் ஒருவர். இவர் வேட்டையன் படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று தான் தியேட்டருக்கு சென்று வேட்டையன் படம் பார்த்த வீடியோவை இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு, ஒரே சூப்பர் ஸ்டார் ஒரே தலைவர். இதுதான் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என்றும் ஒரு பதிவு போட்டுள்ளார் துஷாரா விஜயன்.