உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினிகாந்தின் 'வேட்டையன்' முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?

ரஜினிகாந்தின் 'வேட்டையன்' முதல் நாள் வசூல் நிலவரம் என்ன?


ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் வேட்டையன். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று வெளியான இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் வேட்டையன் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், இந்த படம் உலக அளவில் 72 கோடி வசூல் செய்து இருப்பதாகவும், கண்டிப்பாக இப்படம் முதல் வாரத்தில் 300 கோடிக்கு மேல் வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !