‛பேபி ஜான்' படத்தில் ஜாக்கி ஷெரப்
ADDED : 375 days ago
கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த படம் 'தெறி'. தமிழில் நல்ல வரவேற்பை பெற்ற படம் தற்போது ஹிந்தியில் ரீ-மேக் ஆகி வருகிறது. அட்லியின் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு 'பேபி ஜான்' என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படத்தில் வருண் தவான் , கீர்த்தி சுரேஷ்,வாமிகா கபி ஆகியோரும் நடித்துள்ளனர். காளீஸ் இயக்க, தமன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 25ம் தேதி திரைக்கு வருவதையொட்டி படத்தில் நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில் ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் நடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.