உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாக சைதன்யா, ஆதி நடிக்கும் புதிய வெப் தொடர்

நாக சைதன்யா, ஆதி நடிக்கும் புதிய வெப் தொடர்

தமிழ் சினிமாவை போல் தற்போது தெலுங்கு சினிமாவிலும் வெப் தொடர்களின் தாக்கங்கள் அதிகமாகியுள்ளது. இதில் சில முன்னனி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வரிசையில் தெலுங்கில் சோனி லிவ் தயாரிக்கும் புதிய வெப் தொடரில் நாகசைதன்யா மற்றும் ஆதி இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

தேவ் கட்டா இயக்கும் இந்த வெப் தொடருக்கு 'மாய சபா' எனும் தலைப்பு வைத்துள்ளனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த வெப் தொடர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஒய்.எஸ்.ராஜசேகரா ரெட்டி இருவரின் அரசியல் பின்னனியை மையமாக கொண்ட கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !