‛கூலி' படத்தில் அமீர்கான் உறுதியானது
ADDED : 375 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் கூலி'. அனிரூத் இசையமைக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நிறைவு பெற்றது. கடந்த சில மாதங்களாக இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. தற்போது இதில் அமீர் கான் நடிப்பது உறுதியாகியுள்ளது. கூலியின் அடுத்தகட்ட படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் 17ம் தேதி அன்று சென்னையில் துவங்குகிறது. இதில் ரஜினி சம்மந்தப்பட்ட நிறைய சண்டை காட்சிகள் மற்றும் அமீர் கான் காட்சிகளும் படமாக்கபடுவதாக கூறப்படுகிறது.