மாமனார் அமிதாப்புக்கு தாமதமாக வாழ்த்து சொன்ன ஐஸ்வர்யா ராய்
ADDED : 422 days ago
இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று அவருடைய 83வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
ஆனால், அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் மிகவும் தாமதமாக நேற்றைய நாள் முடியப் போகும் இரவு நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அமிதாப்புடன் தன் மகள் ஆராத்யா இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பா-தாதாஜி, கடவுள் எப்போதும் ஆசீர்வாதிக்கட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா, அபிஷேக் ஆகியோரின் மகளான ஆராத்யா இப்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார். ஆனால், சில வருடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்திருப்பதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.