பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா
ADDED : 418 days ago
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தற்போது பீனிக்ஸ் வீழான் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் . ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 16ஆம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் அவரது மகனான சூர்யா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல இருக்கிறார். அங்கு போட்டியாளராக செல்லாமல், தான் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த பீனிக்ஸ் வீழான் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியை தந்தையுடன் இணைந்து நடத்தப்போகிறார் .