மேலும் செய்திகள்
மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ்
327 days ago
லெவன் பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட்
327 days ago
பாடலால் ஜேசன் சஞ்சய் படம் பாதிப்பா
327 days ago
மாநகரத்தில் அறிமுகமாகி சமீபத்தில் வெளியான போட் வரையிலான படங்களில் தனக்கென ஒரு பாணியில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் காமெடி நடிகர் சாரா. தமிழில் இரண்டு, மலையாளத்தில் ஒரு படத்தில் தீவிரமாக நடித்து கொண்டிருந்தவரிடம் தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம். இனி அவரே தொடர்கிறார்...
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தான் பூர்வீகம். அப்பா ராஜேந்திரன் துணை கலெக்டராக பணிபுரிந்ததால் புதுக்கோட்டையில் பள்ளிப்படிப்பை முடித்தேன். இயல்பாகவே ஹியூமர்சென்ஸ் எனக்கு உண்டு. வீட்டில் நான் இருந்தால் கலகலப்பாக இருக்கும் என பெற்றோர் கூறுவர். தனியாக யுடியூப் சேனல் துவக்கி மக்களை மகிழ்விக்க வேண்டும் என முயற்சி செய்தேன். இதெல்லாம் அப்பாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் எப்போதும் தகராறு தான்.
சினிமாவில் சும்மா முன்னேறி விட முடியாது. ரொம்ப கஷ்டபட வேண்டியிருக்கும். ஆயிரத்தில் ஒருவர் தான் ஜெயிக்க முடியும் என அப்பா தெரிவித்த போது நான் தான் அந்த ஆயிரத்தில் ஒருவன் என்பேன். இதனால் சென்னையில் விஸ்காம் சேர்ந்தேன். அங்கு என்னுடன் பயின்ற பலரும் தற்போது பிரபல யுடியூபர்களாக, சினிமா பிரபலங்களாக உள்ளனர். விஸ்காம் முடித்த கையுடன் மும்பையில் எப்.எம்., ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியை துவங்கினேன். பிறகு ஆர்ட் டைரக்டர் ஒருவரிடம் உதவியாளராக சேர்ந்தேன். நண்பர் விஜய் வரதராஜூடன் இணைந்து டெம்பிள் மங்கிஸ் யூடியூப் சேனல் துவங்கினோம். அப்போது ஹிப்ஹாப் தமிழா ஆதி உள்ளிட்டோரின் நட்பு கிடைத்தது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தை இயக்கியபோது என் நண்பரை அந்த படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் நண்பரோ அந்த வாய்ப்பை என்னிடம் தள்ளி விட்டார். இப்படி தான் மாநகரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' படத்தில் சூரி நடிப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு படங்களில் அவர் பிசியாக இருந்ததால் அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.
பிறகு காமெடி டிராக் பகுதிக்காக ஒரு நாள் மட்டும் நடிக்கும்படி என்னை ஹிப் ஹாப் தமிழா ஆதி அழைத்தார். நான் நடித்த புட்டேஜை பார்த்த இயக்குனர் சுந்தர்.சி, படம் முழுதும் நடிக்கட்டும் என வாய்ப்பு அளித்தார். அந்த நிலையில் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் எனக்கு பெரிய பிரேக் பெற்று கொடுத்தது. அதையடுத்து கோமாளி, ஓ மை கடவுளே, போட் என பல வாய்ப்புகள் கிடைத்தன. எந்த கேரக்டர் கிடைத்தாலும் நடிக்க ஆசை தான். ஆனால் காமெடியனாக நடிக்க தான் வாய்ப்பு வருகிறது.
என்னை பொருத்தவரை மறைந்த நடிகர் ரகுவரன் ஆக்டிங் பிடிக்கும். சமீபத்தில் பார்த்த ஜமா, வாழை, லப்பர்பந்து படங்கள் ரொம்ப இம்ப்ரஸ் பண்ணி விட்டன. சினிமாவை மட்டுமே நம்பி சில இளைஞர்கள் வருகின்றனர். வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் அவர்கள் நிலை கஷ்டமாகி விடுகிறது. எனவே ஏதாவது ஒரு தொழில் கையில் வைத்து கொண்டு சினிமா வாய்ப்பு தேடினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
327 days ago
327 days ago
327 days ago