உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார்

அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார்

தமிழில் களவாணி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன்பின் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார். ஆனால் இதில் கிடைத்த பெயர், புகழ் ஓவியாவிற்கு சினிமாவில் அதிக வாய்ப்பை பெற்றுத் தரவில்லை. இருந்தாலும் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் இரு தினங்களாக ஓவியாவின் வீடியோ என சொல்லப்படும் அவரின் அந்தரங்க வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருப்பது அவர் தானா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என உறுதியாக தெரியவில்லை. இதுபற்றி ரசிகர்கள் பலரும் ஓவியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று அதுதொடர்பான கேள்வியை அவரிடம் முன் வைத்தனர். ஆனால் அவரோ, ‛என்ஜாய் பண்ணி பாருங்க, அடுத்த முறை இன்னும் நீளமான வீடியோ வெளயாகும்' என கூலாக பதில் அளித்தார். பொதுவாக இதுபோன்ற வீடியோக்கள் வெளியானால் அதில் இருப்பது நான் அல்ல என்று தான் பெரும்பாலான பிரபலங்கள் இதற்கு முன் தெரிவித்துள்ளனர். ஆனால் ஓவியாவோ இதை மறுக்காமல் தில்லாக பதில் அளித்து வருகிறார்.

ஓவியாவின் இந்த வீடியோ குறித்து அவரது நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம். நமக்கு கிடைத்த தகவல் இதோ. சம்பந்தப்பட்ட ஓவியாவின் வீடியோவில் இருக்கும் ஆண் நபர் தாரிக் என்பவராம். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனர். ஆனால் தாரிக்கின் நடவடிக்கை ஓவியாவிற்கு பிடிக்காததால் அவரை தவிர்த்து வந்ததாகவும், அந்த கோபத்தில் தாரிக் மார்பிங் செய்து இப்படி இதுபோன்ற வீடியோக்கள், போட்டோக்களை வெளியிட்டு வருவதாக சொல்கிறார்கள். மேலும் இதுபோன்று அவரிடம் நிறைய மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள், போட்டோக்கள் உள்ளதாம்.

இந்த விஷயம் குறித்து நடிகை ஓவியா திரிச்சூர் போலீஸில் தாரிக் மீது புகார் அளித்துள்ளார். விரைவில் அவர் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !