உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனிமேல் யாரைப் பற்றியும் வீடியோ வெளியிட மாட்டேன்! மும்பை பறந்த பாடகி சுசித்ரா!!

இனிமேல் யாரைப் பற்றியும் வீடியோ வெளியிட மாட்டேன்! மும்பை பறந்த பாடகி சுசித்ரா!!


சுமார் 1500 பாடலுக்கு மேல் பின்னணி பாடியவர் சுசித்ரா. இவர் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதால் அவர் மீது காவல்துறையிலும் புகார்கள் அளிக்கப்பட்டது. அதோடு தனது முன்னாள் கணவரான நடிகர் கார்த்திக் மீதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டார். அதையடுத்து அவர் சுசித்ரா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இப்படியான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் சுசித்ரா. அதில் தான் மும்பையில் நிரந்தரமாக செட்டிலாக போவதாக தெரிவித்திருக்கிறார். அதோடு அங்கு சென்று குழந்தைகளுக்கான மாத இதழ் ஒன்றில் பணியாற்ற போகிறேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்றும் தெரிவித்திருக்கும் பாடகி சுசித்ரா, இனிமேல் சோசியல் மீடியாவில் எந்த வீடியோவும் வெளியிட மாட்டேன் என்றும் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !