வசூலைக் வாரி குவித்த லப்பர் பந்து
ADDED : 355 days ago
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ' லப்பர் பந்து' . இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது.
இந்த படத்துடன் போட்டியாக நான்கு படங்கள் வெளியானது. மேலும் அடுத்ததாக இரண்டு பெரிய படங்கள் வெளியாகி நான்கு வாரங்களை கடந்த நிலையில் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் இப்படம் நான்கு வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 37.5 கோடி வசூலித்ததாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். சுமார் ரூ. 5 முதல் 7 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.