உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அகண்டா 2ம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அகண்டா 2ம் பாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவர் கூட்டணியில் ஏற்கனவே சிம்மா, லெஞ்சன்ட், அகண்டா போன்ற படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கடைசியாக. வெளிவந்த 'அகண்டா' படம் தெலுங்கில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

தற்போது இவர்கள் கூட்டணியில் நான்காவது படம் உருவாகிறது. இப்படத்தை BB4 என அறிவித்துள்ளனர். 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் என சமீபத்தில் அறிவித்தனர்.

இன்று இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெறுவதால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பாகத்திற்கும் தமன் தான் இசையமைக்கின்றார்.விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்கும் என அறிவித்துள்ளனர். இதுவும் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !