பாலகிருஷ்ணாவின் மகனுக்கு அம்மாவாக ஷோபனா?
ADDED : 434 days ago
நடிகை ஷோபனா மலையாளத்தில் அதிக படங்களில் நடித்தாலும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் தளபதி, இது நம்ம ஆளு, பொன்மனச் செல்வன்' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தன் வயதுக்கு ஏற்ற வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த 'கல்கி ஏ.டி. 2898' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஷோபனா. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்ஷக்னா ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் ஷோபனா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஹனுமன் பட இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்குகிறார். இதற்கு 'சிம்பா' என தலைப்பு வைத்துள்ளனர்.