உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேட்டையன் 2 உருவாகிறதா? - ஞானவேல் சொன்ன பதில்

வேட்டையன் 2 உருவாகிறதா? - ஞானவேல் சொன்ன பதில்

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாபச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரது நடிப்பில் திரைக்கு வந்த வேட்டையன் படம் பாசிட்டிவான விமர்சனங்களுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்த நிலையில் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று இயக்குனர் ஞானவேல் இடத்தில் கேட்டபோது, வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் எண்ணம் இருப்பதாக கூறுகிறார் . இப்படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்கும் எண்ணம் உள்ளது. இதற்கு ரஜினி ஓகே சொன்னால் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்கிறார் ஞானவேல்.

தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, இதையடுத்து ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருப்பவர் , அதன் பிறகு வேட்டையன் 2வில் நடிப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !