பிரேமலு கூட்டணியில் வெளியாகும் அடுத்த படம் ‛ஐ எம் காதலன்'
ADDED : 489 days ago
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லின், மமிதா பைஜூ இணைந்து நடித்து வெளிவந்த படம் 'பிரேமலு'. யூத் காதலை மையமாக வைத்து வெளிவந்த இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெற்றி படமாக அமைந்தது.
இதையடுத்து மீண்டும் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லின் நடிக்கும் புதிய படத்திற்கு ' ஐ எம் காதலன்' என அறிவித்தனர். இதில் திலேஷ் பொத்தன், அனிஸ்மா, லிஜோ மொல் ஜோஷ் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.இந்த நிலையில் இப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது வருகின்ற நவம்பர் 7ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.