அரண்மனை 5ம் பாகத்திற்கு தயாராகும் சுந்தர். சி!
ADDED : 352 days ago
இயக்குனர் சுந்தர்.சி கடந்த சில வருடங்களாக அரண்மனை 1,2,3 ஆகிய பாகங்களாக ஹாரர் காமெடி ஜானரில் இயக்கி வெற்றி பெற்றார். சமீபத்தில் அரண்மனை 4ம் பாகமும் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
மேலும் அரண்மனை படத்தின் 5ம் பாகம் உருவாகும் என கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது சுந்தர். சி இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். வருகின்ற நவம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். அடுத்த வருடம் சம்மரில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இதற்கிடையே சுந்தர்.சி வடிவேலுவை வைத்து இயக்கியுள்ள கேங்க்ஸ்டர்ஸ் படம் அடுத்த வருடத்தின் முதல் பாதியில் வெளியாகுவதற்கான பணிகளில் உள்ளதாக கூறப்படுகிறது.