சூர்யா 45வது படமாக மாறியதா மாசாணி அம்மன்?
ADDED : 433 days ago
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்திற்கு பிறகு அடுத்து இவர் நடிகை திரிஷாவை வைத்து 'மாசாணி அம்மன்' எனும் படத்தை மூக்குத்தி அம்மன் பாணியில் உருவாக்கவுள்ளார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வந்தது.
ஆனால், இந்த தகவலுக்கு எந்த வகையிலும் சம்மந்தம் இல்லாமல் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி, நடிகர் சூர்யாவின் 45வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்குகிறார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கின்றார் என தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு போஸ்டரில் குதிரை, அருவா என பல குறியீடுகள் இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த படத்தின் கதை குறித்து வரும் தகவல்கள் என்னவென்றால் மாசாணி அம்மன் கதையில் பல மாற்றங்கள் செய்து தான் இப்போது சூர்யாவின் 45வது படமாக உருவாகிறது என்கிறார்கள்.