முடிவுக்கு வருகிறதா கயல் சீரியல்? சைத்ரா ரெட்டி பதில்
ADDED : 409 days ago
சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி காம்பினேஷனில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் கயல். இந்த தொடரில் பல போராட்டங்களுக்கு பிறகு எழில் கயலை திருமணம் செய்கிறார். இதனையடுத்து கயல் சீரியல் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது என பலரும் செய்திகள் பரப்பி வந்தனர். இதற்கு பதிலளித்துள்ள அந்த சீரியலின் கதாநாயகி சைத்ரா, 'கயல் எழில் திருமணம் முடிந்துவிட்டது. இப்போது நான் எங்கு சென்றாலும் என்னிடம் கேட்கப்படும் கேள்வி கயல் முடிகிறாதா? என்று தான். ஆனால், அதற்கு பதில் இல்லை. இதற்கு பிறகு தான் பல ஆச்சரியமான ட்விஸ்ட்டுகள் வர உள்ளது' என்று பதிலளித்துள்ளார். ஆக மொத்தம் கயல் தொடருக்கு தற்போதைக்கு எண்ட் கார்டு இல்லை.