அருண் விஜய்யின் ‛ரெட்ட தல' படப்பிடிப்பு முடிவடைந்தது
ADDED : 351 days ago
‛மிஷன் சாப்டர் ஒன்' என்ற படத்தை அடுத்து பாலா இயக்கிய ‛வணங்கான்' படத்தில் நடித்துள்ளார் அருண் விஜய். அப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதையடுத்து கிறிஸ் திருக்குமரன் என்பவர் இயக்கத்தில் ‛ரெட்ட தல' என்ற படத்தில் நடித்து வந்தார் அருண் விஜய். அப்படத்தின் படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவடைந்து இருக்கிறது.
அதை அறிவிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர், டிரைலர் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.