உத்தரகண்ட் ஜெகதீஸ்வரர் கோயிலுக்கு சென்ற மிருணாள் தாக்கூர்!
ADDED : 367 days ago
ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், சீதாராமம் என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜெகதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார் மிருணாள் தாக்கூர். அது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த ஆன்மிகப் புகைப்படங்கள் மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.