உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி

மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி

குரங்கு பொம்மை பட இயக்குனர் நிதிலன் சாமிநாதன் சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து 'மகாராஜா' படத்தை இயக்கிருந்தார். இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது நிதிலன் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது, மகாராஜா படத்தை தொடர்ந்து மீண்டும் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறேன். இது குறித்து அறிவிப்புகள் மற்றும் மற்ற விவரங்களை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !