உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்குவா படம் குறித்து மதன் கார்த்தி வெளியிட்ட தகவல்

கங்குவா படம் குறித்து மதன் கார்த்தி வெளியிட்ட தகவல்

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடித்திருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. மிகுந்த பொருட்ச் செலவில் பான் இந்தியா படமான பேண்டஸி கலந்த கதையில் உருவாகி உள்ளது. இப்படம் குறித்து பாடலாசிரியர் மதன் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், கங்குவா படத்திற்கு டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சிகளையும் 100 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். அப்படி பார்க்கும்போது ஒவ்வொரு முறையும் படத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது. வியப்பூட்டும் விசுவல், கோர்வையான காட்சிகள், சிறந்த கலை அம்சம் கொண்ட இந்த படம் ஆழமான கதையில், சிறந்த இசையில் இசையில் சூர்யாவின் மிகச் சிறப்பான நடிப்புடன் ஒரு மிகப்பெரிய பிரமாண்ட படமாக உருவாகி இருக்கிறது. இப்படி ஒரு அதிசயமான அனுபவத்தை கொடுத்த இயக்குனர் சிவாவுக்கு மனமார்ந்த நன்றி. குறிப்பாக இந்த கனவை நனவாக்கிய ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !