வேட்டையன் ‛சப்வே' சண்டைக்காட்சி மேக்கிங் வீடியோ வெளியீடு
ADDED : 361 days ago
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர் நடிப்பில் கடந்த பத்தாம் தேதி திரைக்கு வந்த படம் ‛வேட்டையன்'. இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அப்படத்தின் சில மேக்கிங் வீடியோக்களை லைகா நிறுவனம் வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தில் இடம் பெற்ற சப்வே சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது எடுத்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ரஜினிகாந்துக்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் ஆக்ஷ்ன் சொல்லித்தருவது, அதை ஒளிப்பதிவாளர் படமாக்குவது. இயக்குனர் ஞானவேல் காட்சி குறித்து விளக்குவது என அந்த சட்டைக்காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதேப்போல் பஹத் பாசில் நடித்த பேட்டரி கேரக்டரின் மேக்கிங் வீடியோ காட்சிகளையும் வெளியிட்டுள்ளனர்.