சமந்தாவை தொடர்ந்து ஸ்ருதிஹாசனும் விலகல்
ADDED : 355 days ago
சென்னையில் பிறந்த ஆங்கில எழுத்தாளர் திமேரி என்.முராரி என்பவர் எழுதிய 'அரேஞ்மென்ட் ஆப் லவ்' என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டு 'சென்னை ஸ்டோரி' எனும் ஆங்கிலப் படமொன்று உருவாகிறது. இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட ஹாலிவுட் நடிகர் விவேக் கல்ரா ஹீரோவாக நடிக்கின்றார். இதனை பாப்டா விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் இயக்குகிறார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் சமந்தா ஒப்பந்தமாகி இருந்தார். அதற்குப் பிறகு கால்ஷீட் பிரச்சினையால் இப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து சமந்தாவிற்கு பதிலாக ஸ்ருதிஹாசன் நடிக்க ஒப்பந்தமானார். தற்போது கால்ஷீட் பிரச்னையை காரணமாக முன்வைத்து ஸ்ருதிஹாசனும் இப்படத்திலிருந்து விலகியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.