சிம்புவிற்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை
ADDED : 354 days ago
நடிகர் சிம்பு தற்போது கமல் உடன் ‛தக் லைப்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் என்ற படத்தை அஸ்வத் இயக்குகிறார். இந்த படத்தை முடித்த பின் சிம்புவின் படத்தை துவங்க உள்ளார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. சிம்புவிற்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனாட்சி சவுத்ரி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கிறார்கள். தமிழில் கொலை, சிங்கப்பூர் சலூன் போன்ற படங்களில் இவர் நடித்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான விஜய்யின் ‛தி கோட்' படத்திலும் மீனாட்சி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.