வெற்றி மாறன், ரஞ்சித் போன்று தான் எனக்கு தமிழரசன் பச்சமுத்து - அட்டகத்தி தினேஷ்
ADDED : 355 days ago
அட்டகத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அட்டகத்தி தினேஷ். விசாரணை, அண்ணனுக்கு ஜே, குக்கூ, திருடன் போலீஸ் போன்ற சில படங்களை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
சமீபத்தில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'லப்பர் பந்து'. இந்த படத்திற்கு பிறகு அட்டகத்தி தினேஷ் இப்போது கெத்து தினேஷ் ஆக மாறியுள்ளார். தற்போது கெத்து தினேஷ் அளித்த பேட்டி ஒன்றில், எனக்கு சினிமா துறையில் பா.ரஞ்சித், வெற்றிமாறன் இருவரும் அண்ணன் மாதிரி. எந்தவொரு விஷயம் என்றாலும் இவர்களைத் தேடி தான் போவேன். அவர்கள் எனக்கு குரு மாதிரி. இப்போது இந்த இடத்திற்கு தமிழரசன் பச்சமுத்து வந்துள்ளார் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.