மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
317 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
317 days ago
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்து திரையரங்குகளில் வெளிவந்த படம் 'நந்தன்'. நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதளவில் வெற்றி படமாக அமையவில்லை.
சமீபத்தில் இப்படம் ஓடிடியில் வெளியான பிறகு நந்தன் படத்தை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டு படக்குழுவினரை பாராட்டினார்கள். பா.ஜ.,வைச் சேர்ந்த அண்ணாமலை, பா.ம.க.,வை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இந்த நிலையில் 'நந்தன்' படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியும் படக்குழுவினரைப் பாராட்டி இருக்கிறார். சசிகுமார் மற்றும் இரா.சரவணன் இருவரையும் தொலைபேசி வாயிலாக அழைத்து பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக சசிகுமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதன்படி, “நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய ரஜினிகாந்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி” என குறிப்பிட்டு தனது நன்றியை பகிர்ந்துள்ளார்.
317 days ago
317 days ago