மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
316 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
316 days ago
எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி தனது 30வது படமாக 'பிரதர்' எனும் படத்தில் நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், பூமிகா சாவ்லா, பிரியங்கா மோகன், விடிவி.கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
அக்கா, தம்பி சென்டிமென்ட் கதை களத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக துபாயில் உள்ள க்ரூஸ் கப்பலில் ஜெயம் ரவி, பூமிகா, பிரியங்கா மோகன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பங்குகொண்டனர். மேலும், ரிலீஸ்க்கு சில நாட்களே உள்ள நிலையில் இன்னும் பிரதர் படத்தின் டிரைலர் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
316 days ago
316 days ago