மாரி செல்வராஜ் அப்பா கதையில் கார்த்தி?
ADDED : 350 days ago
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை போன்ற வெற்றி படங்களைத்தொடர்ந்து இப்போது நடிகர் துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' எனும் படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து தனுஷ், கார்த்தி ஆகிய நடிகர்களின் படங்களை இயக்கவுள்ளார்.
கார்த்தி, மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தினை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்கிறார்கள். தற்போது இந்த படத்தின் கதை குறித்து கிடைத்த தகவலின் படி, இப்படம் மாரி செல்வராஜின் அப்பா வாழ்க்கையில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகிறது என தெரிவிக்கின்றனர்.