நவம்பர் 18ம் தேதி ஓடிடியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி
ADDED : 364 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ம் ஆண்டு சென்னையில் ஒரு ரிசார்ட்டில் நடந்தது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்தத் திருமண நிகழ்வை ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு விற்றதாக அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. இயக்குனர் கவுதம் மேனன்தான் அதை இயக்கினார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த நிகழ்ச்சி பற்றிய மேற்தகவல்கள் வெளியாகாமல் இருந்தன.
இந்த மாதத் துவக்கத்தில் 'நயன்தாரா . பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் அந்த நிகழ்ச்சி ஓடிடியில் விரைவில் வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது அந்த நிகழ்ச்சி நவம்பர் 18ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.