மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
311 days ago
குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி'
311 days ago
ஒரு படத்தின் வரவேற்புக்கு அதன் ஓடும் நேரத்தை சரியாக வைக்க வேண்டும். சமீப காலங்களில் சில பெரிய படங்களின் நீளம் மிக அதிகமாக சுமார் 3 மணி நேரம் வைக்கப்பட்டது. அது ரசிகர்களுக்கு கடும் சோர்வைத் தந்தது. எதிர்மறை விமர்சனங்கள் வந்த பிறகு அந்த நீளத்தைக் கொஞ்சம் சுருக்கினார்கள்.
இப்படியான விமர்சனங்களை கருத்தில் கொண்டு 'கங்குவா' படக்குழு அதன் ஓடும் நேரத்தை 2 மணி நேரம் 34 நிமிடங்களுக்குள் முடித்துள்ளது. அதிக பொருட்செலவில் எடுக்கிறோம், அதனால் அதிகமான நேரம் வைக்கிறோம் என்றில்லாமல் ரசிகர்களின் விருப்பத்தைப் புரிந்து கொண்டு வைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். இதனிடையே, அந்தப் பாராட்டுக்களை பார்க்க முடியாத நிலையில் அதற்குக் காரணமான படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் திடீர் மரணமடைந்தது படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
சரித்திரமும், நிகழ்காலமும் கலந்த படமாக உருவாகியுள்ள 'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக உள்ளது.
311 days ago
311 days ago