சிவகார்த்திகேயனை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் முருகதாஸ்?
ADDED : 311 days ago
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. தற்போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். மறுபுறம் ஹிந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படத்தினை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.