உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பாட்டல் ராதா' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ்

‛பாட்டல் ராதா' படம் டிசம்பர் 20ல் ரிலீஸ்

ஜோக்கர் படம் மூலம் கவனம் ஈர்த்தவர் குரு சோமசுந்தரம். தொடர்ந்து பல்வேறு படங்களில் குணச்சித்ரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். இப்போது மீண்டும் ஹீரோவாக ‛பாட்டல் ராதா' என்ற படத்தில் நடித்துள்ளார். நாயகியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். தினகரன் சிவலிங்கம் என்பவர் இயக்கி உள்ளார். ஒரு குடிகாரனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் குறித்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்நிலையில் வருகிற டிசம்பர் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !