ஓடிடிக்கு வரும் ரஜினியின் வேட்டையன்
ADDED : 355 days ago
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் வேட்டையன். அனிருத் இசையமைத்த இந்த படம் அக்டோபர் பத்தாம் தேதி திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் இதுவரை 300 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது தியேட்டர்களில் வேட்டையன் படம் ஓடி முடித்து விட்டதால், விரைவில் ஓடிடிக்கு வந்து விடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வருகிற நவம்பர் எட்டாம் தேதி வேட்டையன், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.