‛கேம் சேஞ்சர்' டீசர் தேதியை அறிவித்த படக்குழு
ADDED : 355 days ago
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி, சுனில், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தில் ராஜூ அவரது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படம் 2025ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் அடுத்த அப்டேட்டாக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் இன்று தீபாவளி தினத்தை முன்னிட்டு வருகின்ற நவம்பர் 9ந் தேதி அன்று இப்படத்தின் டீசரை வெளியிடுவதாக புதிய போஸ்டருடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.