ஹேப்பி என்டிங் ஆர். ஜே. பாலாஜியின் புதிய படம்!
ADDED : 356 days ago
காமெடி நடிகர், ஹீரோ, இயக்குனர் என தன்னை உயர்த்தியவர் ஆர்ஜே பாலாஜி. தற்போது சொர்க்கவாசல் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர நடிகர் சூர்யாவின் 45வது படத்தை இயக்கவுள்ளார். இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். மறுபுறம் சில படங்களை தேர்வு செய்து கதாநாயகனாக நடித்து வருகிறார் ஆர். ஜே.பாலாஜி.
குட் நைட், லவ்வர் போன்ற படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் 'ஹேப்பி என்டிங்' எனும் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடித்து வருகிறார். இதற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். இதனை இன்று டைட்டில் டீசர் உடன் அறிவித்துள்ளனர். ஆர்ஜே பாலாஜியின் வாழ்க்கையில் வரும் ஏகப்பட்ட காதல்களை மையமாக வைத்து இந்தப்படம் இருக்கும் என தெரிகிறது.