பிரபாஸ் படத்தில் இணைந்த ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
ADDED : 310 days ago
தமிழகத்தை சேர்ந்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் தெலுங்கில் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆக அறிமுகமானார். அதன்பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த கபீர் சிங், அனிமல் ஆகிய படங்களுக்கும் இவர் தான் இசையமைத்தார்.
தற்போது நான்காவது முறையாக இந்த கூட்டணி இணைகிறது. சந்தீப் ரெட்டி வங்கா அடுத்து பிரபாஸின் 'ஸ்பிரிட்' படத்தை இயக்குகிறார். நேற்று முதல் இந்த படத்தின் பாடல்களை இசையமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார் என அவர் இசையமைக்கும் வீடியோ உடன் அறிவித்துள்ளனர்.