வெங்கடேஷ் படத்தில் இரண்டு நாயகிகள்
ADDED : 359 days ago
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவர் வெங்கடேஷ் டகுபதி. இன்னும் இவர் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். தற்போது எப்2, எப்3 படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அனில் ரவிபுடி இயக்கத்தில் வெங்கடேஷ் புதிய படத்தில் நடித்து வந்தார். இன்று(நவ., 1) இந்த படத்திற்கு 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என தலைப்பு வைத்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளனர். 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளனர். மேலும், இதில் வெங்கடேஷ் உடன் இணைந்து இரண்டு இளம் கதாநாயகிகளான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மீனாட்சி சவுத்ரி இருவரும் நடித்துள்ளனர். இப்போது இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மறுபுறம் இதன் டப்பிங் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகிறது.