கேப்டன் பிரபாகரன் 2 : மன்சூர் அலிகான் வெளியிட்ட தகவல்
ADDED : 359 days ago
1991ல் விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய படம் கேப்டன் பிரபாகரன். விஜயகாந்தின் 100வது படமான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்திற்கு பிறகுதான் திரையுலகில் விஜயகாந்தை அனைவருமே கேப்டன் என்று அழைக்கத் தொடங்கினார்கள். இந்த படத்தில் மன்சூரலிகான் வில்லனாக நடித்திருந்தார். அவருக்கும் இந்த படம் பெரிய திருப்புமுனையை தந்தது.
இந்த நிலையில் தற்போது கேப்டன் பிரபாகரன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு தகவலை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மன்சூர் அலிகான். குதிரையில் சவாரி செய்யும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு, ‛‛கேப்டன் பிரபாகரன் பார்ட்-2 நான் ரெடி. சண்முகபாண்டியன் ரெடியா? வாங்க... ஆனா அந்த படத்தை ஆர்.கே.செல்வமணி மட்டும்தான் இயக்க வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார் மன்சூரலிகான்.