ஹாரர் படத்தில் ராஷ்மிகா
ADDED : 357 days ago
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் அசத்தி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது புஷ்பா- 2, குபேரா, சிக்கந்தர் என பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்த படியாக ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா ஹீரோவாக நடிக்கும் தமா என்ற ஹாரர் படத்தில் கமிட்டாகி உள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் ஹிந்தியில் வெளியான முஞ்யா என்ற படத்தை இயக்கிய ஆதித்யா சர்போத்தர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மிரட்டலான பேய் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.