நவ. 15ம் தேதி வெளியாகும் குபேரா படத்தின் டீசர்
ADDED : 475 days ago
தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் அவரது 51வது படமாக 'குபேரா' என்கிற படத்தில் நடித்து வருகின்றார். இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இதன் பெரும்பாலும் படப்பிடிப்பு முடிவடைந்தது இன்னும் ஒரு வாரங்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற நவம்பர் 15ம் தேதி அன்று வெளியிடுவதாக இன்று தயாரிப்பு தரப்பில் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பன்மொழி திரைப்படமாக 'குபேரா' தயாரிக்கப்படுகிறது.