ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஈரம் படம் : ஜான்வி கபூர் நாயகி
ADDED : 354 days ago
தமிழில் 2009ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'ஈரம்'. ஆதி, நந்தா, சிந்து மேனன், சரண்யா மோகன் உள்ளிட்டோர் நடத்தனர். இத்திரைப்படம் தமிழில் வெளிவந்த மாறுபட்ட ஹாரர் த்ரில்லர் படமாக இருந்தது. இதுவரை இப்படம் தமிழிலிருந்து வேறு எந்த மொழியிலும் ரீமேக் செய்யவில்லை.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஈரம் படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை ஹிந்தியில் பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இயக்குகிறார். இவர் தான் ஈரம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஈரம் ஹிந்தி ரீமேக்கில் ஜான்வி கபூர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சில மாறுதல்களுடன் பிரமாண்டமாக இப்படத்தை உருவாக்குகின்றனர் என கூறப்படுகிறது.