நடிகர் சாருஹாசனுக்கு அறுவை சிகிச்சை : சுஹாசினி தகவல்
ADDED : 344 days ago
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்தவர் கமல்ஹாசனின் அண்ணனான சாருஹாசன். தற்போது 93 வயதாகும் சாருஹாசன் வயது முதிர்ச்சி காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாள் நள்ளிரவில் அவரது உடல் நலம் மோசமானதால் அவசரமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் அவரது மகளான நடிகை சுஹாசினி, விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.