மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
309 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
309 days ago
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 31ம் தேதி வெளியான படம் 'அமரன்'. இப்படம் முதல் நாளில் 42 கோடியே 30 லட்சம் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் வசூலை இன்னும் அறிவிக்கவில்லை.
முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள், மூன்றாம் நாள் வசூல் அதிகமாக இருந்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாள் வசூலின் கணக்கை வைத்துப் பார்த்தால் கடந்த மூன்று நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைக் கடந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த படம் ஒன்று மூன்றே நாட்களில் 100 கோடி வசூலைக் கடப்பது இதுவே முதல் முறை. இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் இன்றைய வசூலும் முந்தைய மூன்று நாட்களின் வசூலைப் போலவேதான் இருக்கும். அடுத்த வார நாட்களிலும் படத்திற்கு குறிப்பிடத்தக்க முன்பதிவு நடந்துள்ளது. படத்தின் வசூல் எப்படியும் 200 கோடியைத் தாண்டும் என்று இப்போதைக்கு யூகித்துள்ளார்கள்.
இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் 25 நாட்களில் 100 கோடி வசூலித்தது. அதையடுத்து வெளியான டான் படம் 12 நாட்களில் நூறு கோடி வசூலித்தது.
309 days ago
309 days ago