உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாதவனின் ‛அதிர்ஷ்டசாலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

மாதவனின் ‛அதிர்ஷ்டசாலி' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மித்ரன். ஆர். ஜவஹர் நடிகர் மாதவனை வைத்து 'அதிர்ஷ்டசாலி' எனும் புதிய படம் ஒன்றை கடந்த பல மாதங்களாக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்றது .

மேலும், இப்படத்திற்கு கதையை மாதவன் எழுதியுள்ளார். இதில் கதாநாயகியாக ஷர்மிளா மன்திரி மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். ஏ.ஏ. மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஒருபுறம் வெளிநாடுகளில் பணக்கார தோற்றத்தில் மாதவன் உள்ளார். மறுபுறத்தில் மலைப்பகுதியில் உள்ள சாதரணமான தோற்றத்தில் உள்ளார் மாதவன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !