அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர்
ADDED : 336 days ago
ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்து திரைக்கு வந்த படம் 'அமரன்'. தமிழகத்தை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூலில் சாதனையை படைத்து வருகிறது.
இதைத்தொடர்ந்து இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து ஹிந்தியில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனை பாலிவுட் நடிகர் அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.