சிம்பிளாக திருமணத்தை முடித்த பிக்பாஸ் விக்ரமன்
ADDED : 340 days ago
யூ-டியூபில் அரசியல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து தனது அரசியல் கேரியருக்கான இமேஜை தேடிக்கொண்டார். விசிக கட்சியின் உறுப்பினரான இவர் மீது கிருபா முனுசாமி என்பவர் பாலியல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விக்ரமனுக்கு மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை தான் விக்ரமன் திருமணம் செய்திருக்கிறார். ப்ரீத்தி கரிகாலன் முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே சூழ சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றுள்ளது.