ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ்?
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படம் 'அமரன்'. இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் முக்கிய மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது.
அமரன் படத்தின் வெற்றிக்கு பின் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் மேலும் கவனம் பெற்றுள்ளனர். குறிப்பாக தற்போது இந்த படத்தின் இயக்குனரை தேடி தயாரிப்பாளர்கள் படையெடுக்கின்றனர். அந்தவகையில் தனுஷை வைத்து கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் ஒரு படத்தை தயாரிக்க உள்ளார். இதை ராஜ்குமார் பெரியசாமி இயக்க போகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் தற்போது இதன் பணிகள் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.