'ராமாயணா' - 2026 தீபாவளி வெளியீடு
ADDED : 304 days ago
நிதிஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் ராமாயணக் கதை 'ராமாயணா' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்கோத்ரா எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
சுமார் 800 கோடி ரூபாய் செலவில் தயாராக உள்ள இந்தப் படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவி, ராவணன் கதாபாத்திரத்தில் யஷ் நடிக்கிறார்கள். லாரா தத்தா, சன்னி தியோல், ஷீபா சத்தா மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளார்கள்.
2000 கோடி வசூலைக் குவித்த 'டங்கல்' படத்தை இயக்கியவர்தான் நிதிஷ் திவாரி. இந்தியத் திரையுலகத்தில் இதுவரை வந்திராத அளவிற்கு இப்படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.